LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
www.garudabazaar.com

ஜெர்மனி டூர் முடிஞ்சது.. அடுத்து ஐரோப்பாவில் இந்த நாடு தான்! பிரியா பவானி சங்கர் பகிர்ந்த PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ப்ரியா பவானி சங்கர் ஐரோப்பிய நாடுகளில் நண்பர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

Priya Bhavani Shankar Latest Photos from Germany Switzerland

Also Read | '"கபாலி கமர்சியலா பெரிய ஹிட்டு".. "மன உளைச்சல்ல இருந்தேன்".. மனம் திறந்த பா. ரஞ்சித்!

பிரியா பவானி சங்கர் சமீபத்தில்  யானை படத்தில் ஜெபமலர் எனும் கதாபாத்திரத்திலும், குருதி ஆட்டம் படத்தில் வெண்ணிலா எனும் கதாபாத்திரத்திலும், திருச்சிற்றம்பலம் படத்தில் ரஞ்சனி எனும் கதாபாத்திரத்திலும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன் சோனி லிவ் தளத்தில் வெளியான விக்டிம் ஆந்தாலஜியிலும் நடித்துள்ளார்.

Priya Bhavani Shankar Latest Photos from Germany Switzerland

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர். 

Priya Bhavani Shankar Latest Photos from Germany Switzerland

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சென்ற பிரியா பவானி சங்கர் புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தை சுற்றிப் பார்த்தார். மேலும் பாரிஸ் நகர வீதிகளில் பிரான்ஸ் உணவுகளை சாப்பிடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

Priya Bhavani Shankar Latest Photos from Germany Switzerland

அடுத்து பிரான்ஸ் டூரை முடித்து கொண்டு அடுத்த நாடாக பெல்ஜியம் நாட்டிற்கு சென்றார். பெல்ஜியம் வீதிகளில் உலா வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

Priya Bhavani Shankar Latest Photos from Germany Switzerland

பின்னர் அடுத்த நாடாக நெதர்லாந்து நாட்டிற்கு சென்றார். அங்கு ஆம்ஸ்டர்டம் நகரில் சைக்கிளில் ஊர் சுற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

Priya Bhavani Shankar Latest Photos from Germany Switzerland

நெதர்லாந்து நாட்டில் இருந்து சில நாட்களுக்கு முன் ஜெர்மனி நாட்டிற்கு சென்றார். அங்கு பிளாக் ஃபாரஸ்ட் பகுதியில் சுற்றுலா சென்றார். பிளாக் ஃபாரஸ்ட் நீர்நிலைகளின் கரைகளில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.‌ தற்போது ஜெர்மனி சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அடுத்த நாடாக சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்வதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிரியா பவானி சங்கர் அறிவித்துள்ளார்.

பிரியா பவானி சங்கர் நடிப்பில் தற்போது ருத்ரன், பத்து தல, பொம்மை உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

Also Read | உறவினர்கள் முன்னிலையில் நடிகை ஆண்ட்ரியாவின் தங்கை திருமணம்.. அவரே பகிர்ந்த வைரல் PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

Priya Bhavani Shankar Latest Photos from Germany Switzerland

People looking for online information on Germany Switzerland, Priya Bhavani Shankar, Priya Bhavani Shankar Latest Photos will find this news story useful.