www.garudabazaar.com
iTechUS

தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்'.. தென் தமிழகத்தின் முக்கிய நகரத்தில் ஷூட்டிங்? வேறமாரி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Dhanush Captain Miller 2nd schedule shooting starts today Deets

Also Read | பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை மட்டும் இத்தனை கோடி பேர் பாத்துருக்காங்களா .. முழு விவரம்!

நடிகர் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம்  ‘கேப்டன் மில்லர்’ படத்தினை தயாரிக்கிறது. ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.

இப்படம் 1930கள்-40களின் பின்னணியில்  பீரியட் படமாக உருவாகிறது, மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

Dhanush Captain Miller 2nd schedule shooting starts today Deets

கேப்டன் மில்லர்  படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர்.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஜான் கொக்கன், சந்தீப் கிஷன், நிவேதிதா  ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கிறார்.

Dhanush Captain Miller 2nd schedule shooting starts today Deets

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டர் நாகூரன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, த.ராமலிங்கம் கலை இயக்குனராக பணிபுரிய உள்ளார்.  மாஸ்டர் திலீப் சுப்பராயன், சண்டை காட்சி இயக்கத்தை கவனிக்க உள்ளார், இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.

Dhanush Captain Miller 2nd schedule shooting starts today Deets

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல் தென்காசி மாவட்டத்தில் துவங்கியது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்றுமுதல் தென் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் துவங்கி உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | "ஆட்டநாயகன்"..விஜய் நடித்த 'வாரிசு'.. 11 நாளில் உலகளவில் செய்த மொத்த வசூல் நிலவரம்!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Captain Miller 2nd schedule shooting starts today Deets

People looking for online information on Captain Miller, Captain Miller Movie Update, Dhanush, Priyanka Mohan will find this news story useful.