www.garudabazaar.com
iTechUS

சுந்தர் சி இயக்கத்தில் விஜய் சேதுபதி?.. சூப்பர் ஹிட் படத்தின் அடுத்த பார்ட்..? போடு செம்ம

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.

Sundar C Next joining hands Vijaysethupathy for Aranmanai 4

Also Read | "ஆட்டநாயகன்"..விஜய் நடித்த 'வாரிசு'.. 11 நாளில் உலகளவில் செய்த மொத்த வசூல் நிலவரம்!

1996ஆம் ஆண்டு முதல் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்து வந்தவர் விஜய் சேதுபதி, லவ் பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, புதுப்பேட்டை, எம். குமரன் S/o மகாலெட்சுமி, லீ, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா ஆகிய படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக கவனிக்க தக்க வகையில் நடித்திருப்பார்.

பின் தென்மேற்கு பருவக்காற்று, பீட்ஸா, சூது கவ்வும், சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார். அவ்வப்போது கேமியோ, வில்லன் ரோல்களிலும் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

Sundar C Next joining hands Vijaysethupathy for Aranmanai 4

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் , காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன், DSP ஆகிய படங்கள் வெளியானது. 

விஜய் சேதுபதி நடித்து இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளீர்,  விடுதலை, மும்பைக்கர், பிசாசு2, ஜவான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

Sundar C Next joining hands Vijaysethupathy for Aranmanai 4

மேலும் ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் புகழ் பெற்ற இயக்குனர்களான ராஜ் & டிகே இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் Farzi, அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தில் நடிக்க உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sundar C Next joining hands Vijaysethupathy for Aranmanai 4

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி, 1995 ஆம் ஆண்டு வெளிவந்த முறை மாமன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவருடைய இயக்கத்தில் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், உன்னைத் தேடி, அன்பே சிவம், கிரி, வின்னர், லண்டன், கலகலப்பு சீரிஸ், அரண்மனை சீரிஸ், தீயா வேலை செய்யனும் குமாரு, ஆம்பள ஆகிய படங்கள் முக்கியமானவை.

Also Read | தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்'.. தென் தமிழகத்தின் முக்கிய நகரத்தில் ஷூட்டிங்? வேறமாரி!

தொடர்புடைய இணைப்புகள்

Sundar C Next joining hands Vijaysethupathy for Aranmanai 4

People looking for online information on Sundar C, Vijay Sethupathi will find this news story useful.