www.garudabazaar.com

இப்படி ஒரு ‘ராக்கிங்’ டைட்டிலா? படு ட்ரெண்டிங்கில் பிரேம்ஜியின் புது பட போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பிரேம்ஜியை அறியாதோர் இருக்க முடியாது. இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட கங்கை அமரன் மகன்.

Premgi amaren staring and musical Tamil Rockers movie look

இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன், வெங்கட் பிரபுவின் இயக்கத்திலான பெரும்பாலான படங்களில் கவனிக்கத்தக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவை அனைத்துமே ரசிக்கும்படியான எதார்த்தமான கதாபாத்திரங்கள் தான்.

அந்த வகையில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் பிரேம்ஜி நடித்த சென்னை - 28, கோவா, மங்காத்தா, மாஸ் என்கிற மாசிலாமணி, சரோஜா உள்ளிட்ட படங்கள் அனைத்திலுமே பிரேம்ஜியின் கேரக்டரை மறக்க முடியாத வகையில் அமைந்தன.

இந்நிலையில் தான் பிரேம்ஜி நடிப்பிலான புதிய திரைப்படத்தின் வேற லெவல் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தமிழ் ராக்கர்ஸ் என பெயரிட்டுள்ளனர்.  பரணி ஜெயபால் இயக்கும் இந்த படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்க, கங்கை அமரன் பாடல்களை எழுதுகிறார்.

அண்மையில் ராதா மோகன் இயக்கத்தில் வைபவ் நடித்து நேரடியாக ஜீ5 ஓடிடியில் வெளியான மலேஷியா டூ அம்னீஷியா படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்திருந்தார்.

ALSO READ: “தசாவதாரம் PhDனா.. அந்த படம் Degree சார்!”.. கமலின் இடுகைக்கு பிரபல இயக்குநரின் வைரல் கமெண்ட்!

தொடர்புடைய இணைப்புகள்

Premgi amaren staring and musical Tamil Rockers movie look

People looking for online information on Gangai amaran, Premgi Amaren, Trending will find this news story useful.