www.garudabazaar.com

வெளியான நயன்தாராவின் நெற்றிக்கண் பட சிங்கிள்! பாடியது யார்னு தெரிஞ்சா மிஸ் பண்ண மாட்டீங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் முக்கிய படங்களில் ஒன்று நெற்றிக்கண்.

Nayanthara Netrikkann first single released trending

இந்த படம் OTT இல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. மிலிந்த் ராவ் இயக்கும் நெறிக்கண் படம் பார்வை மாற்றுத்திறனாளியான ஒரு பெண்ணை கதையின் மையமாக வைத்து உருவாகியுள்ளது.

இதில் பார்வை மாற்றுத்திறனாளியாக வரும் நயன்தாரா தனது மற்ற திறன்களைப் பயன்படுத்தி ஒரு சீரியல் கொலைகாரனை கண்டுபிடிப்பதாக கூறப்படுகிறது. இந்த விறுவிறுப்பான படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் தான் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த பாடல் ஒரு ஹீலிங் சாங் என விக்னேஷ் சிவன் குறிப்பிட்டிருந்தார்.

Nayanthara Netrikkann first single released trending

அந்த வகையில் சித் ஸ்ரீராமின் குரலில், 96 காதலே காதலே பாடல் புகழ் கார்த்திக் நேத்தாவின் வரிகளில் இதுவும் கடந்து போகும் என்கிற இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜ்மல் அமீர், சரண், இந்தூஜா மற்றும் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் கிராஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. 'அவள்' படத்தில் இசை அமைத்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்தில் இசையமைக்க, ​​ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீஸர் கடந்த நவம்பரில் வெளியாகி நெட்டிசன்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் இந்த முதல் சிங்கிள் பாடல் சித் ஸ்ரீராமின் குரலில் ஒரு ஆத்மார்த்தமான மெல்லிசையாக வந்துள்ளது. மேலும் இந்த கடினமான காலங்களில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கத்திற்காக ஏங்குகிற அனைவருக்குமான பாடலாக இந்த பாடல் மனதை வருடுகிறது.

ALSO READ: “ஒரு பாட்டு இவ்வளவு மகிழ்ச்சியை தருதா?” .. மருத்துவமனையில் இருந்து ஒரு நெகிழ்ச்சி Video!

மேலும் செய்திகள்

Nayanthara Netrikkann first single released trending

People looking for online information on Girish Gopalakrishnan, Milind Rau, Nayanthara, Netrikann will find this news story useful.