www.garudabazaar.com

வெறித்தனம்!!! பார்ட்டி வீடியோவைத் தொடர்ந்து வெளியான சஞ்சய் விஜயின் அடுத்த வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழின் முன்னணி மாஸ் ஹீரோவான தளபதி விஜயின் மகன் சஞ்சய் விஜய் (எ) ஜேசன் சஞ்சய் (Jason Sanjay) அண்மைக்காலமாகவே செம்ம ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

Sanjay Vijay another trending photo thalapathy vijay

அண்மையில் தான் சஞ்சய் விஜய் என்கிற ஜேசன் சஞ்சய் தன் நண்பர்களுடன்  எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் தற்போது வைரல் ஆகின. அதில் தம் நண்பர்களுடன் செல்ஃபி மற்றும் ஜாலியாக டான்ஸ் ஆடும் வீடியோ உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.

வேட்டைக்காரன் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலில் டான்ஸ் ஆடிய  விஜயின் மகன் சஞ்சய் விஜய். குட்டி சிறுவனாக அனைவரையும் கவர்ந்த சஞ்சய் விஜய் தற்போது நன்றாகவே வளர்ந்து வெளிநாட்டில் படித்து கொண்டிருக்கிறார். விரைவில் திரைத்துறையில் தடம் பதிப்பார் என பரவலாக விஜய் ரசிகர்களால் பேசப்பட்டும் எதிர்பார்க்கப்பட்டும் வருகிறார் சஞ்சய் விஜய். 

இந்நிலையில் தான் சஞ்சய் விஜயின் செம்ம க்ளாஸிக்கான ஒரு பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படம் இணையத்தில்  வைரலாகி சக்கை போடு போட்டு வருகிறது. ஆம், விஜய் ரசிகர்கள் சஞ்சய் விஜயின் இந்த வேறலெவல் புகைப்படத்தை வெறித்தனமாக பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் தளபதி விஜய் மகன் சஞ்சய் விஜய் கிட்டத்தட்ட விஜயின் சாயலில் நன்றாகவே வளர்ந்துவிட்டார் என இந்த புகைப்படத்தை பார்க்கும் போது தெரிவதாக இந்த புகைப்படத்தை காணும் பலரும் கமெண்டுகளைக் கொடுத்து வருகின்றனர்.

தளபதி விஜயை பொறுத்தவரை டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி65 படத்திலும் அதனைத் தொடர்ந்து பிரபல தோழா படத்தின் இயக்குநரான வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி66 படத்திலும் அடுத்தடுத்து நடிப்பதாக இதுவரையில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ: "அடடா!!".. ஃபோட்டோவுடன் பிறந்த நாளில் ஜி.வி.பிரகாஷ்க்கு சைந்தவி சொன்ன Romantic வாழ்த்து!

தொடர்புடைய இணைப்புகள்

Sanjay Vijay another trending photo thalapathy vijay

People looking for online information on JasonSanjay, SanjayVijay, Vijay will find this news story useful.