www.garudabazaar.com

"போன வருஷம் இதே நாள்.. மதியம்".. சுஷாந்த் சிங் மறைவு நாள்.. ட்விட்டரில் உருக்கும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாற்றுக் கதையான ‘எம்.எஸ்.தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’ படத்தில் தோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

Sushant Singh Rajput first year anniversary twitter trending

இவர் கடந்த வருடம் ஜூன் மாதம் 14-ந் தேதி அதாவது இன்றைய அதே நாளில் தான் மும்பையில் உள்ள வீட்டில் மரணம் அடைந்தார். இவரது மரணம் திரையுலகினரை உலுக்கியது. பின்னர் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து பலரும் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கை மும்பை காவல்துறை, பீகார் காவல்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ உள்ளிட்ட ஐந்து அமைப்புகள் விசாரித்தன. இன்னொரு புறம் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பாக நீதி கிடைக்க வேண்டும் என்கிற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் அடைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. இதையொட்டி #SushantSinghRajput ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. இந்த ஹேஷ்டேகின் கீழ் ரசிகர்கள் சுஷாந்த் சிங்கின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை பற்றி பேசி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Sushant Singh Rajput first year anniversary twitter trending

People looking for online information on Sushant Singh Rajput will find this news story useful.