www.garudabazaar.com

"அந்த நாட்கள்!!".. ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் சஞ்சய் விஜய் பகிர்ந்த மற்றுமொரு Throwback ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் மகன் சஞ்சய் விஜய் தான் இணைய உலகில் இப்போதெல்லாம் டாப் ட்ரெண்டிங் என்று சொல்லலாம்.

Sanjay Vijay Trending Throwback Toronto pic viral

ஜேசன் சஞ்சய் என்கிற சஞ்சய் விஜய் அண்மைக்காலமாகவே ட்விட்டரில் தினமும் ஒரு புகைப்படத்தையோ தம்முடைய நிகழ்வுகளையோ பகிர்ந்து கொள்வது விஜய் ரசிகர்களை பெருமளவில் உற்சாகம் அடைய வைத்திருக்கிறது. வெளிநாட்டில் படித்துவந்த சஞ்சய் விஜய் அண்மையில் தன் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் பார்ட்டி வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானது முதலே அவரைப் பற்றி பலரும் தேடத்தொடங்கினர்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஓபனிங் சாங்கில் விஜயுடன் இணைந்துகைகோர்த்து ஆடிப்பாடிய விஜய்யின் மகன் சஞ்சய் விஜயை அந்த சிறுவயதில் பார்த்த ஞாபகம் மட்டுமே அனைவருக்கும் இருந்தது. இந்த நிலையில் தற்போதைய சஞ்சய் விஜய்யின் புகைப்படத்தை பார்க்கும் அனைவரும் அவர் நன்றாக வளர்ந்து விட்டதாகவும் விரைவில் திரைத்துறையில் தடம் பதிப்பார் போலிருக்கிறது என்றெல்லாம் பேசி வருகின்றனர்.

மேலும் தங்களுக்கு விருப்பமான வேற்று மொழி திரைப்படங்களின் ரீமேக்கில் எந்த படங்களில் சஞ்சய் விஜய் நடித்தால் அபாரமாக இருக்கும் என்றும் இணையதளத்தில் திரைப்பட ரசிகர்கள் பேசி வருகின்றனர். இதனிடையே சஞ்சய் விஜய் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் #SanjayVijay என்கிற ஹேஷ் டேகில் தினமும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் எல்லாமே இணையத்தில் டிராபிக்கை உருவாக்கி வருகின்றன.

இந்த நிலையில்தான் சஞ்சய் விஜய் நேற்றைய தினம் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் அவர் ஒரு புல்வெளியில் கைகளை கட்டிக்கொண்டு அழகாக உட்கார்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படத்தை தொடர்ந்து தற்போது சஞ்சய் விஜய் இன்றைய தினமும் ஒரு புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார். அதில் டொரண்டோவில் தாம் பயின்ற நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை குறிக்கும் விதமாக டொரோண்டா த்ரோபேக் நாட்கள் என்று பதிவிட்டு இந்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். ஜெர்கின் உடையணிந்து சஞ்சய் விஜய் இருக்கும் இந்த புகைப்படம்தான் இப்போது இணையத்தில் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிற புகைப்படமாக இருக்கிறது.

நடிகர் விஜய்யை பொருத்தவரை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். திரையரங்கில் வெளியான இந்த திரைப்படத்தின் பெரு வெற்றிக்கு பிறகு இந்த திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது .

இதனைத்தொடர்ந்து டாக்டர் திரைப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து நடிகர் விஜய் தளபதி65 படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் பலவிதமான அப்டேட்கள் பல்வேறு சூழல்களிலும் ரசிகர்களை வந்து அடைந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில்தான் தளபதி 66 திரைப்படத்தை இயக்கப் போவது அட்லியா? லோகேஷ் கனகராஜா? என்றெல்லாம் பேச்சுகள் எழுந்து இருந்தன.

மிக  சமீபத்தில்தான் தளபதி 66 திரைப்படத்தை இயக்க போவது வம்சி பைடிபல்லி என்பது தெரியவந்தது. இயக்குநர் வம்சி பைடிபல்லி இதை தெரிவித்திருந்தார். இயக்குநர் வம்சி பைடிபல்லி கார்த்தி மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் வெளியான தோழா திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: “தசாவதாரம் PhDனா.. அந்த படம் Degree சார்!”.. கமலின் இடுகைக்கு பிரபல இயக்குநரின் வைரல் கமெண்ட்!

Sanjay Vijay Trending Throwback Toronto pic viral

People looking for online information on JasonSanjay, SanjayVijay will find this news story useful.