நடிகை அமலா பால் நடித்துள்ள ‘ஆடை’ திரைப்படத்தில் ‘மேயாத மான்’ படத்தில் நடித்த பிரபலம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

‘மேயாத மான்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள திரைப்படம் ஆடை. வி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் பெண்களை மையப்படுத்திய இப்படத்தில் அமலா பால் லீட் ரோலில் காமினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரதீப் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அமலா பாலின் தைரியமான முயற்சிக்கும், அவரது நடிப்பிற்கும் பாராட்டுக்கள் குவிந்தன. தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்ட ‘ஆடை’ படத்தில் நடிஅக்ர் விவேக் பிரசன்னா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கௌரி ஷங்கர் என்ற கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடித்துள்ளார்.
முன்னதாக சின்னத்திரை பிரபலம் நடிகை ரம்யா ஜெனிஃபர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதை படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது விவேக் பிரசன்னா நடிப்பதையும் அறிவித்துள்ளது.
‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘சிந்துபாத்’, ‘கொரில்லா’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘ஆடை’ படத்தில் விவேக் பிரசன்னா நடித்துள்ளார்.
Presenting the promising young artist @vivekrprasanna as Gowri in #Aadai#VivekinAadai#AadaiCast@Amala_ams @MrRathna @pradeepvijay @vijaykartik_k @ramyavj @vivekrprasanna @iam_sarithiran @subbhunaarayan@kirubakaran_AKR @thisisoorka@thinkmusicindia@Pradeep_Media pic.twitter.com/libtCBAk8z
— V Studios (@vstudiosoffl) June 21, 2019