www.garudabazaar.com

கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் OPPENHEIMER.. வெளியான வேற லெவல் ரிலீஸ் தேதி டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் OPPENHEIMER படத்தின் ரிலீஸ் தேதி அடங்கிய டீஸர் வெளியாகி உள்ளது.

Christopher Nolan Oppenheimer Movie Release Day Announcement Teaser

Also Read | பாரதியார் கெட்-அப்பில் தனுஷ்.. அசரவைக்கும் 'வாத்தி' படத்தின் டீசர்!

உலக சினிமாவில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் முதல் முறையாக யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது

ஓப்பன்ஹைமர் என இந்த படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டது.  இது கை பேர்ட் மற்றும் மார்ட்டின் ஜே. ஷெர்வின் எழுதிய ஜே. ராபர்ட் ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை வரலாறாகும்.

இத்திரைப்படம் Syncopy Inc. மற்றும் Atlas Entertainment ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பாகும், நோலன் எம்மா தாமஸ் மற்றும் சார்லஸ் ரோவன் ஆகியோருடன் இணைந்து படத்தைத் தயாரிக்கிறார்.

முதல் அணு ஆயுதங்களை உருவாக்கிய இரண்டாம் உலகப் போரான மன்ஹாட்டன் திட்டத்தில் Oppenheimer-ன் பங்கிற்காக "அணுகுண்டின் தந்தை" என்ற பெருமையைப் பெற்றார்.

கோட்பாட்டு இயற்பியலாளரான ஓப்பன்ஹைமரின் பாத்திரத்தில் சில்லியன் மர்பி நடிக்கிறார். நோலனுடன் மர்பி ஆறாவது முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளார்.

மர்பியுடன் எமிலி பிளண்ட், மாட் டாமன், ராபர்ட் டவுனி ஜூனியர், மற்றும் ஃப்ளோரன்ஸ் பக் ஆகியோரும் படத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சிலநாட்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் இன்று இப்படத்தின் டீஸர் ரிலீஸ் தேதியுடன் வெளியாகி உள்ளது. கருப்பு வெள்ளை நிறத்தில் டீஸர் அமைந்துள்ளது.

இந்தப் படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் ஜூலை 21, 2023 அன்று அமெரிக்காவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. வார்னர் பிரதர்ஸ் விநியோகம் செய்யாத நோலனின் முதல் படம் இது. இந்த படம் IMAX, 70mm & 35mm ஆகிய இரு முறைகளில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும். ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் இந்த படம் படமாக்கப்பட்டு வருகிறது.

Also Read | கபடி வீரராக அதர்வா.. டீச்சராக பிரியா பவானி சங்கர்.. வெறித்தனமான 'குருதி ஆட்டம்' டிரெய்லர்!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் OPPENHEIMER.. வெளியான வேற லெவல் ரிலீஸ் தேதி டீசர்! வீடியோ

Christopher Nolan Oppenheimer Movie Release Day Announcement Teaser

People looking for online information on Christopher Nolan, Oppenheimer, Oppenheimer Movie, Oppenheimer Movie Announcement will find this news story useful.