“ஜல்லிக்கட்டு காளை ரெடி..” - பிரபுதேவா படத்துக்காக முதன்முறையாக தமிழ் பேசிய சல்மான் கான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்துள்ள ‘தபங் 3’ திரைப்படத்திற்காக முதன் முறையாக சல்மான் கான் தமிழில் டயலாக் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

Prabhudeva Salman Khan Tamil dialogue Jallikattu Kaalai Dabangg 3

டில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘தபங் 3’ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சோனாக்ஷி சின்ஹா, அர்பாஸ் கான், மஹி கில், கிச்சா சுதீப் ஆகியோர் நடித்து வரும் இப்படத்தை நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா இயக்கி வருகிறார். ‘Wanted' திரைப்படத்திற்கு பின் 10 ஆண்டுகள் கழித்து சல்மான் கான் மற்றும் பிரபுதேவா கூட்டணி அமைந்துள்ளது. ‘தபங்’ சீரிஸின் மூன்றாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தை சல்மான் கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் தயாரித்து வருகிறார்.

நடனப்புயல் பிரபுதேவா இயக்கத்தில் ‘சுல்புல் பாண்டே’ என்ற கதாபாத்திரத்தில் சல்மான் நடித்துள்ள ‘தபங் 3’ திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா என 4 மொழிகளில் வரும் டிசம்பர்.20ம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தின் அனைத்து மொழிகளையும் தமிழகத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் முதல் தமிழ் புரொமோ வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘ஜல்லிக்கட்டு காளை ரெடி... நீங்க ரெடியா?’ என்பதை சல்மான் கான் தனது சொந்த குரலில் பேசியுள்ளார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுடன் ஒப்பிட்டு வெளியாகியிருக்கும் இந்த புரொமோ வீடியோ மட்டுமின்றி தபங் 3 திரைப்படத்திற்கும் தமிழக ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“ஜல்லிக்கட்டு காளை ரெடி..” - பிரபுதேவா படத்துக்காக முதன்முறையாக தமிழ் பேசிய சல்மான் கான் வீடியோ