www.garudabazaar.com

வடிவேலுவின் தாறு மாறு moves… ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் அடுத்த கொல மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் செம்மயான அப்டேட் ஒன்றை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Prabhudeva choreographed a song in Naai sekar Returns

வடிவேலுவின் 10 ஆண்டுகள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான வடிவேலு கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் தீவிரமாக நடிகக்வில்லை. வெகுசில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். இதற்கிடையில் நடிப்பில் தொடங்கிய இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி திரைப்படம் ட்ராப் ஆனது. ஆனால் சமூகவலைதளங்ஜளில் மீம்ஸ் மன்னன் என்று சொல்லும் அளவுக்கு எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்ப வடிவேலுவின் ரியாக்ஷன்கள், வசனங்கள், பாடி லாங்குவேஜ் உள்ளிட்ட அனைத்தும் பொருந்தும். சமூகவலைதளங்களின் வளர்ச்சியால் வடிவேலு அடுத்த தலைமுறை சினிமா ரசிகர்களும் கொண்டாடும் ஒரு கலைஞராக இருந்து வருகிறார்.

Prabhudeva choreographed a song in Naai sekar Returns

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்…

கடந்த சில ஆண்டுகளில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய மெர்சல் படத்திலும், பின்னர் லாரன்ஸ் நடித்த சிவலிங்கா திரைப்படத்திலும் தோன்றிய நடிகர் வடிவேலு, இதனை தொடர்ந்து இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அவர் இசையில் வடிவேலு ஒரு பாடலையும் பாடியுள்ளார். மேலும் வடிவேலு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் திரைப்படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.

Prabhudeva choreographed a song in Naai sekar Returns

மீண்டும் இணைந்த வடிவேலு பிரபுதேவா…

இந்நிலையில் இப்போது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தைத் தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஒரு சூப்பரான அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளாராம். இது சம்மந்தமாக “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். மீண்ட்ய்ம் வைகைப்புயல் வடிவேலுவின் தாறு மாறு மூவ்ஸ்களை காண தயாராகுங்கள்” எனக் கூறி படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.  வடிவேலு பிரபுதேவா கூட்டணியில் உருவான பேட்டராப் உள்ளிட்ட பல பாடல்கள் எவர்கிரீன் ஹிட்டாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhudeva choreographed a song in Naai sekar Returns

தொடர்புடைய இணைப்புகள்

Prabhudeva choreographed a song in Naai sekar Returns

People looking for online information on Naai Sekar Returns, Prabhudeva, Vadivelu will find this news story useful.