www.garudabazaar.com

'டேய் தகப்பா' படத்தில் ஹீரோவாகும் முன்னணி இயக்குநரின் மகன்.. இணையும் 3 CWC பிரபலங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மைனா, கயல், கும்கி, காடன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் பிரபு சாலமன்.

Prabhu soloman son acting debut dei thagappa movie

இவரது மகன் சஞ்சய், தற்போது ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்ப்பரேஷன் சார்பாக C.V. விக்ரம் சூர்யவர்மா தயாரிப்பில் கௌசிக் ஶ்ரீபுஹர் இயக்கத்தில் உருவாகும் "டேய் தகப்பா" எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

                              (படம்: சஞ்சய், ஆராத்யா)

பல விருது பெற்ற குறும்படங்களை இயக்கிய கௌசிக் ஶ்ரீபுஹர் இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமாகிறார். 

                     (படம்: இயக்குநர் கௌசிக் ஶ்ரீபுஹர்)

ஏற்கனவே பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கப்பட்ட இந்த படத்தினை C.V.விக்ரம் சூர்யவர்மா தயாரிக்கிறார் என்பதும், அவருக்கு இது முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(நாயகன், நாயகி மற்றும் இயக்குநருடன் தயாரிப்பாளர் C.V.விக்ரம் சூர்யவர்மா)

இந்த படத்தின் நாயகியாக ஆராத்யா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மதுரை முத்து, ‘விஜய் டிவி’ பப்பூ, ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைத்துள்ளார். S.J.சுபாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் நடன பணிகளை பாபா பாஸ்கர் மேற்கொள்கிறார். அதாவது இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலங்களான மதுரை முத்து, பாபா பாஸ்கர், விஜய் டிவி பப்பு மூவரும் இணைந்துள்ளனர். 

ALSO READ: "மாசம் ரூ.750-க்கு ஃபாஸ்ட் ஃபுட் கடையில வேலை செஞ்சேன்!".. மாஸ்டர் செஃப் Press meet-ல் விஜய் சேதுபதி! Video

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Prabhu soloman son acting debut dei thagappa movie

People looking for online information on Aaradhya, Baba Baskar, Baba Bhaskar, Dei Thagappaa, DeiThagappa, Madurai Muthu, Prabhu Solomon, Sanjay, VijayTelevisionPappu, VijayTV Pappu will find this news story useful.