www.garudabazaar.com

Video: "தளபதி விஜய் மகனா இது? Friends-உடன் Selfie.. Dance.. பார்ட்டி! Trending!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழின் முன்னணி மாஸ் ஹீரோ தளபதி விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay) தன் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் தற்போது வைரல் ஆகி ட்ரெண்டிங்கில் உள்ளன.

Thalapathy Vijay Son Jason Sanjay Viral dance selfie with Friends

வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஒரு பாடலில் விஜய்யுடன் இணைந்து விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் நடித்திருந்ததை பார்த்திருப்போம். அப்போது குட்டி சிறுவனாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது நெடுநெடுவென வளர்ந்து விட்டார். வெளிநாட்டில் படித்து கொண்டிருக்கிறார்.

Thalapathy Vijay Son Jason Sanjay Viral dance selfie with Friends

இவர் தற்போது தம் நண்பர்களுடன் செல்ஃபி எடுக்கும் புகைப்படத்துடன் நண்பர்களுடன் ஜாலியாக டான்ஸ் ஆடும் வீடியோவும் இணைந்து சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Thalapathy Vijay Son Jason Sanjay Viral dance selfie with Friends

விரைவில் திரைத்துறையில் களமிறங்குவார் என்று ஒருபுறம் ரசிகர்கள் கூறிவரும் நிலையில் இன்னொருபுறம் நடிகராக மட்டுமல்லாமல் அவர் திரையில் பின்னணி பணிகளாக இருக்கக்கூடிய தயாரிப்பு மற்றும் இயக்கம் உள்ளிட்ட விஷயங்களிலும் கவனம் செலுத்துவார் என்றும் அதற்காக அவர் நிறையவே பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் பேசி வருகின்றனர்.

Thalapathy Vijay Son Jason Sanjay Viral dance selfie with Friends

அன்மையில் தெலுங்கில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி ஹிட்டடித்த உப்பன்னா என்ற திரைப்படம் தமிழில் ரீமேக் ஆனால் அதில் ஜேசன் சஞ்சய் நடித்தால் நன்றாக இருக்கும் என்கிற பேச்சு ரசிகர்களிடையே பரவலாக இருந்ததை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இந்நிலையில் இந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தளபதி விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த விடியோ மற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் உற்சாகமாக கமண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

Thalapathy Vijay Son Jason Sanjay Viral dance selfie with Friends

தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் தளபதி65 படத்திலும் அதனைத் தொடர்ந்து வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி66 படத்திலும் நடிக்கிறார்.

ALSO READ: "அரசியலுக்கு அப்பாற்பட்டு"... உதயநிதியை வாழ்த்திய கஸ்தூரி.. ஏன் தெரியுமா? அசத்தல் ட்வீட்!

VIDEO: "தளபதி விஜய் மகனா இது? FRIENDS-உடன் SELFIE.. DANCE.. பார்ட்டி! TRENDING! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay Son Jason Sanjay Viral dance selfie with Friends

People looking for online information on Jason Sanjay, ThalapathyVijay, Trending, Vijay, Vijay Son will find this news story useful.