www.garudabazaar.com

உலகின் மிகப்பெரிய கேமரா முன் நடிக்கும் பிரபாஸ் - தீபிகா படுகோனே! படக்குழு வெளியிட்ட BTS Image!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ சீரிஸ் படங்களின் வெற்றிக்கு பிறகு பரந்த ரசிகர் பட்டாளத்தை பெற்றார். 

Prabhas and deepika padukone Project K Arri Rental Alexa 65

இவரின் அடுத்த படமான 'சாஹோ' விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனால் பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அறிவுரைப்படி காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் 'ராதே ஷியாம்' படத்தில் நடிக்கிறார். இந்த படம் 1970களில் ஐரோப்பாவில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் 2022 பொங்கலுக்கு ராதே ஷ்யாம் வெளிவருகிறது.

பிரபாஸ் அடுத்து நான்கு பெரிய படங்களை அறிவித்த பிறகு பிரபாஸ் ரசிகர்களிடம்  பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. தீபிகா படுகோனின் தெலுங்கு அறிமுகமபடமான, தற்காலிகமாக பிரபாஸ் 21 என பெயரிடப்பட்டுள்ள ப்ரொஜெக்ட் கே  படம், ஆடிபுருஷ் மற்றும் கேஜிஎஃப் இயக்குனருடன் இணையும் சலார், சந்திப் ரெட்டி வாங்காவுடன் ஸ்பிரிட்  படம் என வரிசையாக படங்களை வைத்துள்ளார்.

Prabhas and deepika padukone Project K Arri Rental Alexa 65

இந்நிலையில் வைஜெயந்தி மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத்  தயாரிப்பில் தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் Project K படத்தின் முதல் கட்ட ஷீட்டிங் ஐதராபாத்தில் துவங்கியுள்ளது.  இதில் நடிகை தீபிகா படுகோன், பிரபாஸ் கலந்து கொண்டுள்ளனர். இந்த படத்தில் உலகின் மிகப்பெரிய கேமராவான ARRI RENTAL ALEXA 65 பயன்படுத்தப்படுகிறது என படக்குழு அறிவித்துள்ளது. இந்த வகை கேமராவில் தான் உலகப்புகழ் பெற்ற Cats (2019), Joker (2019) ...Solo: A Star Wars Story (2018) ...If Beale Street Could Talk (2018) ...Bohemian Rhapsody (2018) ...Live by Night (2016) ...War for the Planet of the Apes (2017) போன்ற படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

Prabhas and deepika padukone Project K Arri Rental Alexa 65

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Prabhas and deepika padukone Project K Arri Rental Alexa 65

People looking for online information on AmitabhBachchan, ARRI, ARRI ALEXA, Arri Rental, Arri Rental Alexa 65, தீபிகா, தீபிகா படுகோனே, தீபிகா படுகோன், பிரபாஸ், Deepika Padukone, DeepikaPadukone, Nag Ashwin, Prabhas, Project K, ProjectK will find this news story useful.