Vilangu Others
www.garudabazaar.com

PICS: தனது காதலருடன் தாஜ்மஹால் சென்ற பிரபல தமிழ் நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆக்ரா : பிரபல தமிழ் நடிகை  தனது காதலருடன் தாஜ்மஹாலுக்கு சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Famous Tamil Actress Visits Taj Mahal with Her Lover

சமந்தா நடிக்கும் புதிய படம்! 3 கோடி ரூபாய்க்கு பிரம்மாண்ட செட்! படக்குழு வெளியிட்ட BTS PHOTOS!

31 வயதாகும் நடிகை ரகுல் ப்ரித் சிங், இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் கார்த்தியுடன் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களிலும், சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர்.

இவர் தற்போது சிவகார்த்திக்கேயனுடன் அயலான் படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார்.

Famous Tamil Actress Visits Taj Mahal with Her Lover

சில மாதங்களுக்கு முன் நடிகை ரகுல் பிரித் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானியை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

ஜாக்கி பாக்னானி தமிழில் திரிஷாவுடன் மோகினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Famous Tamil Actress Visits Taj Mahal with Her Lover

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ரகுல் பிரித் சிங்கும் முக்கியமானவர். சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய போட்டோவை ரகுல் பிரித் சிங் பகிர்ந்தார்.

அதில், இந்த போட்டோவை எடுத்த பிறகு உணவு உண்ண போவதாக குறிப்பிட்டார். அந்த அளவுக்கு உடலமைப்பை மாற்றி இருந்தார்.

இந்நிலையில் திரைப்பட இயக்குனர்கள் லவ் ரஞ்சன் மற்றும் அலிஷா திருமணத்தில் கலந்து கொள்ள ஆக்ரா வந்த திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பாக்னானி மற்றும் திரைப்பட நடிகை ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தாஜ் மஹாலை பார்க்க வந்தனர். அங்கு சுமார் 45 நிமிடங்கள் தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தனர். 

Famous Tamil Actress Visits Taj Mahal with Her Lover

ரகுல்ப்ரீத் சிங்கும் ஜாக்கியும் மதியம் 12:45 மணிக்கு தாஜ்மஹாலை வந்தடைந்தனர். ரகுல் ப்ரீத் நீல நிற குர்தா மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தார், ஜாக்கி வெள்ளை குர்தா மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தார்.

கூட்டத்தைத் தவிர்க்க, இருவரும் ஒருவரையொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு, பிரதான அரச வாசலுக்குப் பதிலாகப் மாற்றுப்பாதையிலிருந்து பிரதான சமாதியை காவலர்கள் பாதுகாப்புடன் அடைந்தனர். தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்துவிட்டு இருவரும் பின் வாசலில் இருந்து வெளியேறி சென்றனர்.

Famous Tamil Actress Visits Taj Mahal with Her Lover

ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானி இருவரும் ஒன்றாக இருப்பதைப் பார்த்த அவர்களது ரசிகர்கள் தாஜ்மஹாலில் குவிந்தனர். ரசிகர்கள் அவர்களுடன் செல்ஃபி எடுக்க விரும்பினர், ஆனால் இருவரும் மக்களிடமிருந்து விலகி இருந்தனர்.

காவல் பாதுகாப்பு படையினர் யாரையும் அருகில் வர அனுமதிக்கவில்லை. சுமார் அரை மணி நேரம் ரகுல்ப்ரீத்தும் ஜாக்கியும் தாஜ்மஹாலில் இருந்தனர். அதன் பிறகு ஹோட்டல் அமர்விலாஸ்க்கு புறப்பட்டனர்.

Famous Tamil Actress Visits Taj Mahal with Her Lover

திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான லவ் ரஞ்சன் தனது தோழியான அலிஷா வைத் என்பவரை ஆக்ராவில் உள்ள ஹோட்டல் அமர்விலாஸில் திருமணம் செய்து கொண்டார். திரைப்பட தயாரிப்பாளர் லவ் ரஞ்சனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பெரிய பாலிவுட் நட்சத்திரங்கள் ஆக்ரா வந்துள்ளனர். 

வலிமை படத்தின் புதிய ப்ரோமோ! ஆக்ரோஷமான அஜித்தின் பக்கா மாஸ் சேஸிங் காட்சிகளுடன் வெளியான VIDEO

தொடர்புடைய இணைப்புகள்

Famous Tamil Actress Visits Taj Mahal with Her Lover

People looking for online information on Bollywood, Famous Tamil Actress, Kollywood, Lover, NGK, Rakul Preet Singh, Taj mahal, Tamil cinema, Theeran will find this news story useful.