www.garudabazaar.com

பாகுபலி போல பிரபாஸ் நடிக்கும் புராணத் திரைப்படம் எப்போ ரிலீஸ்? புதிய ரிலீஸ் தேதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

MUMBAI: பாகுபலி பிரபாஸின் PAN INDIA புராண திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

PRABHAS ADIPURUSH MOVIE NEW RELEASE DATE ANNOUNCED

தெலுங்கு நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ சீரிஸ் படங்களின் வெற்றிக்கு பிறகு பரந்த ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இவரின் அடுத்த படமான 'சாஹோ' விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

அதனால் பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அறிவுரைப்படி காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் 'ராதே ஷியாம்' படத்தில் நடிக்கிறார். இந்த படம் 1970களில் ஐரோப்பாவில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச்-11,2022 அன்று இந்த படம் வெளியாக உள்ளது. 

அடுத்து நான்கு பெரிய படங்களை அறிவித்த பிறகு பிரபாஸ் ரசிகர்களிடம்  பெரும் உற்சாகம் ஏற்பட்டது. தீபிகா படுகோனின் தெலுங்கு அறிமுகமபடமான, தற்காலிகமாக பிரபாஸ் 21 என பெயரிடப்பட்டுள்ள ப்ரொஜெக்ட் கே  படம், ஆடிபுருஷ் மற்றும் கேஜிஎஃப் இயக்குனருடன் இணையும் சலார், சந்திப் ரெட்டி வாங்காவுடன் ஸ்பிரிட்  படம் என வரிசையாக படங்களை வைத்துள்ளார்.

PRABHAS ADIPURUSH MOVIE NEW RELEASE DATE ANNOUNCED

இந்நிலையில் இவர் அடுத்து நடிக்கும் ஆடிபுருஷ் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளிவந்துள்ளது. ராமயணத்தை மையமாக வைத்து உருவாகும் ஆடிபுருஷ் படத்தில் ஓம் ராவத் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சயிப் அலி கான் முக்கிய வேடத்தில் பிரபாசுடன் இணைந்து நடிக்கிறார். நடிகை "பரம சுந்தரி" புகழ் கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழில் வெளியாக உள்ளது.

(11.08.2022) அன்று இந்த படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதே நாளில் அமிர்கானின் லால் சிங் சத்தா வெளியாக உள்ளதால், ஆடி புருஷ் ரிலீஸ் தள்ளிப்போனது. 

PRABHAS ADIPURUSH MOVIE NEW RELEASE DATE ANNOUNCED

"எங்கள் திரைப்படமான லால் சிங் சத்தா, திட்டமிட்டபடி ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகாது என்பதை அறிவிக்கவே இது. எங்களால் படத்தை சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் போனதே இதற்குக் காரணம். இப்படம் இப்போது 11 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. திரு.பூஷன் குமார், டி சீரிஸ், ஓம் ரவுத் மற்றும் ஆடி புருஷின் முழு குழுவிற்கும் எங்கள் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

லால் சிங் சத்தா ஆகஸ்ட் 11, 2022 அன்று வரக்கூடிய வகையில் பிரபாஸ், க்ரித்தி சனோன் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் நடித்துள்ள ஆடி புருஷ் படக்குழு மிகவும் உதவியாகவும், புரிந்துணர்வுடனும் இருந்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்". என அமீர்கான் தெரிவித்துள்ளார்.

PRABHAS ADIPURUSH MOVIE NEW RELEASE DATE ANNOUNCED

இந்நிலையில் ஆதி புருஷ் திரைப்படம் 2023 மஹா சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12,2023 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

PRABHAS ADIPURUSH MOVIE NEW RELEASE DATE ANNOUNCED

People looking for online information on Adipurush, Prabhas will find this news story useful.