www.garudabazaar.com

“மிரட்டுதே!”.. வித்யா பிரதீப் & பிரபல PRO இணைந்து கலக்கும் Powder பட டீசர்.. Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மூத்த நடிகர் சாருஹாசன் நடித்த ‘தாதா 87’ படத்தை இயக்கியவர் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி.

Powder Official Teaser Vijay Sri G Vidya Pradeep NikilMurukan

இவர் தான், தற்போது ‘பவுடர்’ என்று தலைப்பிடப்பட்ட புதிய படத்தை துவங்கியுள்ளார். வித்யா பிரதீப் மற்றும் பிரபல பி.ஆர்.ஓ நிகில் முருகன் முதன்மை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் மனோபாலா, வையாபுரி, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஆகியோருடன் பல அறிமுக நாயக, நாயகியர்களும்  நடிக்கிறார்கள்.

திரில்லர் கலந்த பிளாக் காமெடி படமாக இந்த படம் தயாராகிறது. மக்கள் ‘பவுடர்’ பூசிய போலியான முகத் தோற்றத்துடன் தங்கள் அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வருகிறார்கள். இப்படி வாழும் பல காதாபத்திரங்களை பற்றிய படம்தான் இந்த படம் என கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இந்த டீசருக்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் வெளியீடு உள்ளிட்ட விபரங்களை விரைவில் அறிவிப்பார்கள் என தெரிகிறது. இந்த படத்துக்கு ‘தாதா 87’ படத்தின் முலம் அறிமுகம் ஆகி பலரது பாராட்டுக்களையும் பெற்ற RP (ராஜ பாண்டி) ஒளிப்பதிவு செய்கிறார். 

Also Read: "டைரக்டர்.. இசையமைப்பாளர்.. பாடலாசிரியர்"... #AV33 படத்தில் நடித்த பன்முக பிரபலம்! போடு வெடிய!

Powder Official Teaser Vijay Sri G Vidya Pradeep NikilMurukan

People looking for online information on Nikkil Murugan, Powder, Sam CS, Vidya Pradeep will find this news story useful.