Reliable Software
www.garudabazaar.com

'கர்ணன் கண்ணபிரான்' நட்டியின் அடுத்த படம் இதுதான்... ஹீரோயின் யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்துடன், நட்டி நட்ராஜ், வித்யா பிரதீப் நடிப்பில் அறிமுக இயக்குநர் சாய் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ளது இன்ஃபினிட்டி திரைப்படம்.

natty nataraj vidya pradeep starring infinity movie

மாறுபட்ட கதைகளம் கொண்டதாகக் கூறப்படும் இந்த திரைப்படம் “மென்பனி புரொடக்‌ஷன்ஸ்” சார்பாக வை.மணிகண்டன், உ.பிரபு, கி.அற்புதராஜன் மற்றும் த.பாலபாஸ்கர் இணை தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நட்டி நட்ராஜ், வித்யா பிரதீப் ஆகியோருடன் முனீஷ்காந்த், சார்லஸ் வினோத், வினோத் சாகர், ஜீவா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஓர் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படமாகவும், சில உண்மை சம்பவங்களின் அடிப்படையாகவும் வைத்து இந்த படம் உருவாகியுள்ளதாகவும், மருத்துவ துறையில் நடக்கும் கருப்பு பக்கங்களை இப்படம் தோலுரிப்பதாக அமையும் என்றும் இப்படத்தின் இயக்குநர் சாய் கார்த்திக் கூறியுள்ளார்.

சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு எஸ்.என். ஃபாஸில் எடிட் செய்துள்ளார். டாம் ஜோவின் இசையமைத்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு  மும்முரமாக ஈடுபட்டு வருவதால், இன்ஃபினிட்டி திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ALSO READ: நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனாவா?.. ‘தடுப்பூசி போடலாமா?’..அவரே வெளியிட்ட வீடியோ!

தொடர்புடைய செய்திகள்

natty nataraj vidya pradeep starring infinity movie

People looking for online information on Infinity, Natty Natraj, Vidya Pradeep will find this news story useful.