www.garudabazaar.com

ரிலீசுக்கு முன்பே Leak ஆன "புஷ்பா" பட காட்சிகள்? என்ன தான் நடக்குது?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

allu arjun pushpa movie fight scene leaked issue

சுகுமார் இதற்கு முன்பு ராம் சரண் மற்றும் சமந்தா நடிப்பில் இந்திய அளவில் பேசப்பட்ட தெலுங்கில் வெளியான 'ரங்கஸ்தலம்' (2018) என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பான்-இந்தியன் திரைப்படமான 'புஷ்பா' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஒன்றாகும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்தப்படம் திரைக்கு வருகிறது.

allu arjun pushpa movie fight scene leaked issue

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் ஆகஸ்ட் 13 அன்று, தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து வெவ்வேறு மொழிகளில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

allu arjun pushpa movie fight scene leaked issue

இந்த படத்தின் பாடல் கோர்வை ஆகஸ்ட் மாதம் 12 அன்றே திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியானது. அது போக இந்த படத்தின் மிக முக்கிய சண்டைகாட்சியும் தற்போது இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

allu arjun pushpa movie fight scene leaked issue

இதனை முன்னிட்டு புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில் சண்டைக்காட்சிகளை வெளியிட்டவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளதாகவும், இந்த செயலுக்கு தங்களது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. இதேபோல் இந்நிறுவனம் தயாரிக்கும் மகேஷ்பாபு நடிக்கும் சர்காரு வாரி பட்டா படத்தின் டீசரும் இதே போல லீக் ஆனது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

allu arjun pushpa movie fight scene leaked issue

People looking for online information on Allu Arjun, Rashmika Mandanna will find this news story useful.