www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல நடிகர்... அவரே வெளியிட்ட பதிவு... செம குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தினமும் நடக்கும் சண்டை சச்சரவுகள் மூலம் பலரது முகத்திரை கிழிக்கப்பட்டு வருகிறது. மேலும் விறுவிறுப்பை கூட்ட அடுத்தடுத்து வைர்ல்டு கார்டு போட்டியாளர்கள் இறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அடுத்ததும் ஒரு விஜய் டிவி  பிரபலம் தான் நுழைய இருப்பதாக தகவல்கள் வைரலாகிறது.

Popular vijay tv actors confirm post before biggbossபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல நடிகர்

ஆம் ஷிவானியின் ரீல் ஜோடி நடிகர் அசீம் நுழைய உள்ளார் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் 'பகல் நிலவு' சீரியலில் ஒன்றாக நடித்தார்கள். அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம் என்று சீரியலிலும் ஒன்றாக நடிக்கையில் சில எபிசோட்களுக்குப் பிறகு அந்த சீரியல் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ஷிவானி வேறு ஒரு சேனலுக்கு மாறிவிட்டார்.

இந்நிலையில் அசீம்  பிக்பாஸ் வீட்டில் நுழைந்தால், எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ போகிறது என்பதை காண அனைவரும் ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில் அசீம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் "புகழை நீ தேடி போனால் அது பொய்மான், புகழ் உன்னை தேடி வந்தால் அது நெஜமான், அப்பத்தான் நீ அதற்க்கு எஜமான். எதிர்பாராததை எதிர் பாருங்கள்" என்று கூறியுள்ளார். மேலும் வைரலாகும் தகவல் என்னவென்றால் இந்த வாரம் சுசித்ரா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது எந்த அளவில் உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல நடிகர்... அவரே வெளியிட்ட பதிவு... செம குஷியில் ரசிகர்கள்..! வீடியோ

Tags : Azeem, Biggboss

தொடர்புடைய இணைப்புகள்

Popular vijay tv actors confirm post before biggbossபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல நடிகர்

People looking for online information on Azeem, Biggboss will find this news story useful.