பிக்பாஸ் செல்வதற்கு முன்பு ஆரி பேசிவிட்டு சென்ற உருக்கமான வீடியோ... செம வைரல் இப்போ..!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் ஆரி மற்றும் அவரது மனைவியின் திருமண நாளையொட்டி, அவரது மனைவி பேசிய ஸ்பெஷல் வீடியோவை பிக்பாஸ் ஒளிபரப்பினார். அவரது மகளும் பேசியதை பார்த்து ஆரி கண்கலங்கி விட்டார். இந்நிலையில் பிக்பாஸ் செல்வதற்கு முன்பாகவே அவர் தன் மனைவிக்காக ஒரு வீடியோ ஒன்றை பேசியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் "நவம்பர் வரை உள்ளே இருந்தால் இந்த வீடியோவை ஒளிபரப்ப வேண்டும் என்று நான் கூறி விட்டு வந்தேன். மக்கள் அனைவருக்கும் நன்றி" என்று கூறி அவரது மனைவிக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் கூறுகிறார். பின்பு அவர் திருமணம் செய்துகொண்ட சுவாரஸ்யமான கதையும் சுருக்கமாக சொல்லி முடிக்கிறார். அதன் பின்பு அவரும் அவரது மனைவியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காதல் நினைவாக பகிர்ந்துள்ளார். வைரலாகும் இந்த வீடியோ பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ் செல்வதற்கு முன்பு ஆரி பேசிவிட்டு சென்ற உருக்கமான வீடியோ... செம வைரல் இப்போ..! வீடியோ