www.garudabazaar.com

"நிறுத்தாத... நிறுத்தாத".. வெடித்த போராட்டம்.. வெளியான அறிவிப்பு! குஷியில் 2 சீரியல் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த 2 சீரியல் நிறுத்தப்படுவதாக முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

popular two zee tamil serials sequels announcement promo

பிரபல ஜி நெட்வொர்க்கின் சேட்டிலைட் தளம் ஜீ தமிழ் டிவி. இந்தியாவில் பல்வேறு மொழிகளில் இருக்கும் இந்த டிவி சேனல் தமிழிலும் ஜீ தமிழ் என்கிற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என பல்வேறு விதங்களிலும் கலக்கி வரும் ஜீ தமிழ், தமிழின் முன்னணி சேனல்களில் ஒன்றாகவே மாறிவிட்டது.

அந்த வகையில் ஜீ தமிழ் சேனலில் அர்ஜூன் தொகுத்து வழங்கி வழிநடத்தும் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான சர்வைவர், விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ரியாலிட்டி ஷோவின் வருகைக்குப் பிறகு, ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சீரியல்களில் நேரம் மாற்றியமைக்கப்பட்டன.

குறிப்பாக ‘சத்யா’ மற்றும் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ ஆகிய இரண்டு சீரியல்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்புக்கு பின்னர் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி ஆனதாக ஜீ தமிழ் உணர்ந்ததை அடுத்து, பிரத்தியேகமாக ஒரு புதிய புரோமோவை வெளியிட்டது.

அதில் ரசிகர்கள் பலரும் சத்யா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல்களை பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆனதாகவும், அவர்கள் இந்த சீரியல்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக அதிர்ச்சி அடைந்ததை அடுத்து, ஜீ தமிழ் சேனலை நோக்கி படையெடுத்து வந்து சீரியலை நிறுத்தாதே நிறுத்தாதே என்று கோஷமிடுவதாகவும் காண்பிக்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து ஜீ தமிழில், ‘சத்யா -2’-ஆம் பாகமும், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலின் அடுத்த பாகமாக, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜகுமாரி’ என்கிற சீரியலும் அதே நடிகர்களைக் கொண்டு வேற லெவலில் புதிதாக ஒளிபரப்பாகவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன.

இதேபோல் சத்யா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல்களின் கிளைமாக்ஸ் காட்சிகள் அடுத்தடுத்த எபிசோடுகளில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவற்றுக்கான புரோமோ வீடியோக்களும் வெளியாகி இருக்கின்றன.

popular two zee tamil serials sequels announcement promo

People looking for online information on Sathya2, Serials promo, Today episode, TVSerial, ZeeTamil, Zeetamiltv will find this news story useful.