சீரியல் நடிகையின் வீட்டில் புகுந்த பாம்பு - தைரியமாக பாம்பை கையில் எடுத்து விளையாடும் நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவி சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரவீனா. இவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது வீட்டில் சிறிய பாம்பு நுழைந்துள்ளது. அப்போது பாம்பு பிடிப்பவரின் துணையோடு அதனை கையில் எடுத்து விளையாடுகிறார். 

Popular Serial actress Praveena shares a Video about snake | பிரபல சீரியல் நடிகையின் வீட்டில் நுழைந்த பாம்பு

இந்த வீடியோவை அவர் தனது யூடியூப் பக்கத்தில் பகிர அது வைரலாகி வருகிறது. பாம்பு பிறந்து சில நாட்களே ஆகியுள்ளதால் அதன் காரணமாக பாதிப்புகள் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. மேலும் பாம்புகளின் வகைகளை பொறுத்து ஆபத்துகள் இருக்கும் என்று அவர் விளக்குகிறார்.

நடிகை பிரவீனா சீரியல்கள் மட்டுமல்லாம் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று', ஜெயம் ரவியின் 'கோமாளி', 'சாமி 2' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

சீரியல் நடிகையின் வீட்டில் புகுந்த பாம்பு - தைரியமாக பாம்பை கையில் எடுத்து விளையாடும் நடிகை வீடியோ

Entertainment sub editor