Exclusive: செம்பருத்தி சீரியலின் 'புதிய' ஹீரோ இவர்தான்... 'வீடியோ' உள்ளே!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி ரசிகர்களை அதிகம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று. குறிப்பாக இதில் ஆதி-பார்வதியாக நடித்து வந்த கார்த்திக் ராஜ்- ஷபானா ஷாஜகான் ஜோடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் கார்த்திக் இந்த தொடரில் இருந்து விலகுவதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி அறிவித்தது.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கார்த்திக்கு பதிலாக ஆதித்யா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போவது? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்தது. தற்போது அதற்கான பதில் வெளியாகி உள்ளது. நமது Behindwoods சேனலில் ரசிகர்களின் மனங்கவர்ந்த தொகுப்பாளர் அக்னி தான் அந்த தொடரின் புதிய ஹீரோ.
இதுகுறித்து அக்னி, '' இது நல்லா நான் யோசிச்சு எடுத்த ஒரு முடிவு. இது ஒர்க்கவுட் ஆகும்னு நெனைக்கிறேன். நிச்சயமா நீங்க என்ன ஆதரிப்பீங்க. உங்களுக்கு என்ன புடிக்கும்னு நெனைக்குறேன். இந்த வாய்ப்பை அளித்த ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் இன்சைடர் மீடியாஸ் மற்றும் செம்பருத்தி டீம் ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.
மேலும் பல உயரங்கள் தொட வாழ்த்துக்கள் அக்னி!
EXCLUSIVE: செம்பருத்தி சீரியலின் 'புதிய' ஹீரோ இவர்தான்... 'வீடியோ' உள்ளே! வீடியோ