Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

"இது நடக்க நீங்க தான் காரணம்"... பூவே பூச்சுடவா சீரியல் நடிகை ரேஷ்மா பகிர்ந்த ஹேப்பி நியூஸ்...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். இந்த சீரியல் கடந்த 2018 ஆம் ஆண்டின் டாப் சீரியல்என்று பெயர் வாங்கியிருந்தது. இந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ரேஷ்மா பலரையும்  கவர்ந்துள்ளார். இந்நிலையில் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வந்த மதன் மற்றும் ரேஷ்மா இருவரும் காதலிக்கும் விஷயத்தையும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதையும் சமீபத்தில் அறிவித்திருந்தனர். இந்த விஷயத்தை தங்களது சமூக வலைதளத்திலலும் பதிவிட்டனர்.

popular serial actress shares happy news நடிகை ரேஷ்மா பகிர்ந்த ஹேப்பி நியூஸ்

இந்நிலையில் பூவே பூச்சூடவா சீரியல் ஒரு புதிய சகாப்தத்தை படைத்துள்ளது. தமிழ் சீரியல் வரலாற்றில் வெகு சில சீரியல்களில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து உள்ளது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியல் தற்போது 1000 எபிசோடுகளை எட்டியுள்ளது. இந்த செய்தியை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட நடிகை ரேஷ்மா கூறும்பொழுது "இது எங்களது வெற்றி அல்ல. இதற்கு காரணம் நீங்கள் தான். இந்த சீரியலுக்கு இத்தனை பெரிய வரவேற்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி. மேலும் ஆயிரம் ஐந்தாயிரம் பத்தாயிரம் எபிசோடுகள் சென்றாலும் உங்களுடைய ஆதரவு எங்களுக்கு வேண்டும்" என்று கூறியுள்ளார்.

"இது நடக்க நீங்க தான் காரணம்"... பூவே பூச்சுடவா சீரியல் நடிகை ரேஷ்மா பகிர்ந்த ஹேப்பி நியூஸ்... வீடியோ

Tags : Reshma

popular serial actress shares happy news நடிகை ரேஷ்மா பகிர்ந்த ஹேப்பி நியூஸ்

People looking for online information on Reshma will find this news story useful.