அநேக பாலியல் குற்றங்கள்... 'கம்பி' என்னும் பிரபல தயாரிப்பாளர்... 'கொரோனா' வந்த பகீர் கதை..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் நோய் கொரோனா. சீனாவில் ஆரம்பித்து இன்று உலகம் முழுக்க பரவி வருகிறது. இந்த நோய்க்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கவில்லை. மேலும் இந்நோயை தொற்று நோய் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பல பிரபலங்களுக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் பல்வேறு பாலியல் வழக்குகளில் தொடர்புடைய பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் 'ஹார்வே வீன்ஸ்டின்' தற்போது சிறையில் இருக்கிறார். இவர் மேல் பல பிரபல நடிகைகள் புகார் அளித்து இருந்தனர். அதன் அடிப்படையில் அவர் 23 வருட சிறை தண்டனையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வீன்ஸ்டீனுக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளார் என்று சிறை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர் .
Tags : Harvey Weinstein, Corona, Produducer