www.garudabazaar.com
iTechUS

தளபதி 67 பட பூஜையில்... பிரபல "கைதி" பட நடிகர்.. Viral Pic.. "ஒருவேளை இருக்குமோ?"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக தளபதி 67 படம் உருவாகி வருகிறது. விஜய் நடித்திருந்த மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது தளபதி 67 படத்தையும் இயக்கி வருகிறார்.

Popular Kaidhi fame actor in thalapathy 67 pooja

                     Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அசிம்னா பயமா?.. விக்ரமன் கூட சண்டை வர்றப்போ".. சீக்ரெட் உடைத்த போட்டியாளர்!!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கியது.

இசை அமைப்பாளர் அனிருத், தளபதி 67 படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

Popular Kaidhi fame actor in thalapathy 67 pooja

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே, தளபதி 67 படத்தில் இணைந்துள்ள நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் இருந்தது. அதன்படி, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் மற்றும் சாண்டி உள்ளிட்டோர் தளபதி 67 படத்தில் நடித்து வருவது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

Popular Kaidhi fame actor in thalapathy 67 pooja

Images are subject to © copyright to their respective owners.

அதே போல, நடிகை த்ரிஷாவும் சுமார் 14 வருடங்களுக்கு பிறகு, விஜய்யுடன் தளபதி 67 படத்தில் இணைந்து நடிக்க உள்ளார். இதனிடையே, தளபதி 67 படத்தின் பூஜை நடந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இருந்தது. இதில், நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் S.லலித்குமார், இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிசாமி, அர்ஜுன், த்ரிஷா, மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி, பிரபல இயக்குனர்கள் கார்த்தி சுப்புராஜ், புஷ்கர், ரவிக்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், பிரபல நடிகர் ஜார்ஜ் தளபதி 67 படத்தின் பூஜையில் கலந்து கொண்டிருந்தது அதிகம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Popular Kaidhi fame actor in thalapathy 67 pooja

Images are subject to © copyright to their respective owners.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியாகி இருந்த கைதி திரைப்படத்தில், நெப்போலியன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஜார்ஜ் நடித்திருப்பார். கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் நடிப்பு அதிகம் பாராட்டுக்களை பெற்றிருந்தது. அப்படி இருக்கையில், அவர் தற்போது தளபதி 67 படத்தின் பூஜையிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.

Popular Kaidhi fame actor in thalapathy 67 pooja

Images are subject to © copyright to their respective owners.

ஏற்கனவே தளபதி 67 லோகேஷ் யூனிவர்ஸில் வருமா என்ற கேள்வி பரவலாக இருந்து வருகிறது. ஏற்கனவே, கைதி மற்றும் விக்ரம் என லோகேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள், ஒன்றோடு ஒன்று தொடர்புபடும் வகையில் அமைந்திருந்தது. இந்த நிலையில் தான், கைதி படத்தின் நடிகர் ஜார்ஜ் தற்போது தளபதி 67 பூஜையில் கலந்து கொண்டுள்ளதால், இரு படங்களையும் இணைப்பது போல காட்சிகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதே போல, எதேச்சையாக இந்த படத்தில் நடிகர் ஜார்ஜ் இணைந்திருக்கலாம் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read |"அமுதவாணனை வெளிய அனுப்ப".. பிக் பாஸ் வீட்டில் பிளான் நடந்ததா??... வெளிச்சத்துக்கு வந்த உண்மை

தொடர்புடைய இணைப்புகள்

Popular Kaidhi fame actor in thalapathy 67 pooja

People looking for online information on Kaidhi fame, Kaithi Tamil, Thalapathy 67, Thalapathy 67 pooja will find this news story useful.