www.garudabazaar.com
iTechUS

விஜய் நடிக்கும் தளபதி 67 .. முக்கிய உரிமத்தை கைப்பற்றிய உலகின் முன்னணி நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி 67 படத்தின் முக்கிய உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Thalapathy 67 Movie Audio Rights Bagged by Sony Music

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | 14 வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா.. தளபதி 67 படக்குழு வெளியிட்ட தெறி வீடியோ!

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.

நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது.

Thalapathy 67 Movie Audio Rights Bagged by Sony Music

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

Thalapathy 67 Movie Audio Rights Bagged by Sony Music

Images are subject to © copyright to their respective owners.

  இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தளபதி 67 படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thalapathy 67 Movie Audio Rights Bagged by Sony Music

Images are subject to © copyright to their respective owners.

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் - அனிருத் ரவிச்சந்திரன் கூட்டணியின் உரிமத்தை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | மகேஷ் பாபு நடிக்கும் 'SSMB28'.. மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்ட OTT உரிமம்.. இத்தனை கோடி ரூபாயா!

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy 67 Movie Audio Rights Bagged by Sony Music

People looking for online information on Sony Music, Thalapathy 67, Thalapathy 67 Movie Audio Rights, Thalapathy 67 updates will find this news story useful.