விஜய் சேதுபதி பட ரிலீஸ் குறித்து பிரபல இயக்குநர் அதிரடி - ''எனக்கு அதில் அதிகாரம் இல்லை''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி - இயக்குநர் சீனு ராமசாமி கூட்டணியில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'தர்மதுரை'. குறிப்பாக யுவன் இசையில் இந்த படத்தின் பாடல்கள் படத்துக்கு  ஹைலைட்டாக அமைந்தது. மேலும் 'எந்த பக்கம் காணும் போதும்' என்ற பாடலுக்காக கவிஞர் வைரமுத்துக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Popular Director tweets about Vijay Sethupathi movie release ft, Seenu Ramasamy, Maamanithan | விஜய் சேதுபதி பட ரிலீஸ் குறித்து பிரபல இயக்குநர் அதிரடி

இதனையடுத்து விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி இணைந்த 'மாமனிதன்' படத்துக்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு, இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்த படம் எப்பொழுது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி இந்த பட ரிலீஸ் குறித்து தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ''மாமனிதன்' படத்தின் நான்கு பாடல்களும் மற்றும் பின்னணி இசையையும் இளையராஜா முடித்து விட்டார். யுவன் ஷங்கர் ராஜா பாடலுக்கு அரேஞ்மென்ட் செய்து வருகிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும் எனக்கு அதில் அதிகாரமில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

அந்த பதிவிற்கு ''யுவன் ஷங்கர் ராவிற்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை ?'' என்று ரசிகர் கேள்வி எழுப்ப, ''எனக்கு அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை சார்'' என்று விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Popular Director tweets about Vijay Sethupathi movie release ft, Seenu Ramasamy, Maamanithan | விஜய் சேதுபதி பட ரிலீஸ் குறித்து பிரபல இயக்குநர் அதிரடி

People looking for online information on Maamanithan, Seenu ramasamy, Vijay Sethupathi, Yuvan Shankar Raja will find this news story useful.