மாஸ்டர் ஆடியோ லான்ச் : "கத்தி அப்போ, ஓரமா நின்னேன்.. இன்னைக்கு" - பிரபல இயக்குனர் 'மாஸ்' பேச்சு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி மிரட்ட இருக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் இன்று (15.03.2020) நடக்க இருக்கிறது.

மாஸ்டர் ஆடியோ லான்ச் பிரபல இயக்குனர் அனிருத் பற்றி மாஸ் பேச்சு Popular Director Mass Speech In Master Audio Launch About Anirudh

இந்த நிகழ்ச்சி சென்னை லீலா பேலஸில் துவங்கியுள்ளது. தளபதி ரசிகர்கள் பலரும் விஜய் இன்று என்ன பேச போகிறார் என்று மிகவும் ஆர்வமாக உள்ளனர்.  இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் அவர் ஒரு பாடலை எழுத, யுவன் ஷங்கர் ராஜா பாடுகிறார் என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

அவர் மேடையில் பேசும் போது படத்தின் இசையமைப்பாளரான அனிருத் பற்றி மிகவும் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். என்னவென்றால் "கத்தி பட ஆடியோ லான்ச்சின் பொது அனிருத் பக்கத்துல ஒரு ஓரமாக சும்மா நின்னேன். இன்னைக்கு  ஸ்டேஜ்ல  நிக்குறேன். அனிருத் எப்போதும் எனக்காக இருக்கிறார். எமோஷ்னல் எல்லாம் இல்ல பட் ப்ரென்ட்ஷிப்" என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor