RIP : பட ரிலீசுக்கு முன் பிரபல இயக்குனர் திடீர் மரணம்... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்...!
முகப்பு > சினிமா செய்திகள்31 வயதான இளம் இயக்குனர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கடந்த மார்ச் மாதம் மலையாளத்தில் வெளியான படம் 'கோழிபோரு'. இப்படத்தை ஜிபித் ஜார்ஜ், ஜினோய் ஜனார்தனன் என இரு இயக்குனர்கள் இணைந்து இயக்கி இருந்தனர். கொரோனாவால் இப்படம் வெளியான சில நாட்களிலேயே தியேட்டர்களில் இருந்து எடுக்கப்பட்டது. பின்பு மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் படத்தின் இயக்குனர்களில் ஒருவரான ஜிபித் ஜார்ஜ்க்கு நேற்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் சாதாரண வலி என்று வீட்டிலேயே இருந்துவிட்டார். பின்பு மாலை திடீரென மயங்கி விழுந்தார். குடும்பத்தார் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 31. இளம் இயக்குனர் ஒருவர் மாரடைப்பால் திடீரென மரணமடைந்திருப்பது மலையாள திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.