www.garudabazaar.com

Breaking : ‘இதுவல்லவோ அப்டேட்..!’.. விஜய் படத்தில் இணைகிறாரா இயக்குநர் மிஷ்கின் ? | Vijay

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர்  விஜய். நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார்.  Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

Popular Director antagonist role in Vijay Thalapathy67

Also Read | விஜய் - லோகேஷ் இணையும் தளபதி 67.. டிவிட்டரில் Bio-வை மாற்றிய பிரபல இயக்குனர்! போடு

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பிலான அவருடைய 67 படத்தின் பணிகள் தொடங்கியுள்ளன. பிரபல இயக்குனர் & வசனகர்த்தா ரத்ன குமார், தளபதி 67 படத்தின் வசனகர்த்தாவாக பணிபுரிய உள்ளதை அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார். ரத்னகுமார் ஏற்கனவே மேயாத மான், ஆடை, குளுகுளு ஆகிய படங்களை இயக்கியவர். விக்ரம், மாஸ்டர் படங்களில் வசனகர்த்தாவாக பணிபுரிந்தவர். இந்நிலையில், இப்படத்தில் பிரபல இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

Popular Director antagonist role in Vijay Thalapathy67

முன்னதாக பிஹைண்ட்வுட்ஸ் பேட்டியில் ஒருமுறை மிஷ்கின் பேசும்போது, “நான் போய் விஜய்க்கு கதை சொல்லும் பொழுது விஜய் ஒரு கமர்சியல் படம் என்னிடமிருந்து எதிர்பார்ப்பார்.  தன்னுடைய ரசிகர்களை ஏமாற்ற கூடாது என்று அவர் நினைப்பார். மிஷ்கின் படங்களை விஜய் பார்ப்பார். ஆனால் விஜய் திரைப்படங்கள் மிஷ்கின் பாணியில் இருப்பது என்பது நிச்சயமாக விஜய் ரசிகர்களை ஏமாற்றக் கூடலாம் என்று அவர் கருதலாம். எனவே நான் கதை சொல்லும் பொழுது விஜய் பயந்து தான் கதை கேட்பார். அப்படியும் மீதி சுவாரஸ்யமான ஒரு கதை சொன்னால் அவர் பண்ணுவார்.” என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 67 படத்தில், மிஷ்கின் எதிர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தில் இயக்குநர் மிஷ்கினுக்கு 22  நாட்கள் கால் ஷீட், உள்ளதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.  ஏற்கனவே இப்படத்தில் த்ரிஷா இணைவதாக தகவல்கள் கூறப்பட்டுவந்த நிலையில், இப்போது மிஷ்கினும் இணையும் தகவல் கிடைத்துள்ளது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு'.. சென்சார் REPORT-உடன் வெளியான டிரெய்லர் அப்டேட்..!

தொடர்புடைய இணைப்புகள்

Popular Director antagonist role in Vijay Thalapathy67

People looking for online information on Breaking, Mysskin Vijay, Thalapathy67 will find this news story useful.