www.garudabazaar.com

விஜய் நடிக்கும் 'வாரிசு'.. சென்சார் REPORT-உடன் வெளியான டிரெய்லர் அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Varisu Trailer Releasing on SunTV YouTube channel

Also Read | சிம்பு நடிக்கும் 'பத்து தல'.. பிரியா பவானி சங்கர் பகிர்ந்த தெறி அப்டேட்!

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Varisu Trailer Releasing on SunTV YouTube channel

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022 அன்று நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Varisu Trailer Releasing on SunTV YouTube channel

இந்நிலையில் வாரிசு படத்தின் டிரெய்லர் அப்டேட்டை படக்குழு பிரத்யேக போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு வாரிசு படத்தின் டிரெய்லர் சன் டிவியின் யூடியூப் சேனலில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் வாரிசு படம் 'U' சான்றிதழ் பெறப்பட்டுள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | பிரபல பாலிவுட் நடிகருக்கு முத்தம் கொடுத்த தமன்னா.. வைரலாகும் கோவா பார்ட்டி வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Varisu Trailer Releasing on SunTV YouTube channel

People looking for online information on SunTV YouTube channel, Varisu, Varisu Trailer, Vijay will find this news story useful.