மாஸ்டர் படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்... ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் படம் இன்று ஜனவரி 13 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தளபதியின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்popular biggboss contestant in vijay master

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் நூறு நாட்களுக்கு மேல் கடந்து தங்களது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒவ்வொரு முறையும் பிக்பாஸின் கடைசி வாரத்தில் வெளியேறிய போட்டியாளர்கள் இறுதி போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ரேகா, அர்ச்சனா, ரமேஷ், அனிதா, சனம், வேல்முருகன் போன்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் புகழ் அனிதா மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்ப காட்சியில் கல்லூரி Alumini விழாவை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக அவர் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

தளபதியின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்popular biggboss contestant in vijay master

Tags : Master, Vijay

தொடர்புடைய இணைப்புகள்

தளபதியின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்popular biggboss contestant in vijay master

People looking for online information on Master, Vijay will find this news story useful.