ஆரியை பற்றி பேசிக் கொண்ட சம்யுக்தா மற்றும் பாலா... கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் நூறு நாட்களுக்கு மேல் கடந்து தங்களது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒவ்வொரு முறையும் பிக்பாஸின் கடைசி வாரத்தில் வெளியேறிய போட்டியாளர்கள் இறுதி போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ரேகா, அர்ச்சனா, ரமேஷ், அனிதா, சனம், வேல்முருகன் போன்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

ஆரியை பற்றி பேசிய சம்யுக்தா... ரசிகர்கள் கண்டனம் bala and samyuktha convo goes controversial

இந்நிலையில் அப்படி சம்யுக்தா மற்றும் பாலா பேசிக் கொண்ட ஒரு விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் தனியே பேசிக் கொண்டிருக்கையில் சம்யுக்தா கூறும் பொழுது

"வெளியே அவ்வளவு ஓட்டு வித்தியாசம். அவருக்கு 2000 என்றால், உங்களுக்கெல்லாம் 1000 போல, அவ்வளவு  வித்தியாசம். ஓட்டின் அடிப்படையில் பார்த்தால் ஆரி தான்" என்பது போல் கூறுகிறார். இதை பார்த்த பாலா  "இதற்கு நாங்கள் எல்லாரும் ஏன் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும்" என்பது போல் கேள்வி எழுப்புகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் விஜய் டிவிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். "வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்களை உள்ளே அனுப்பியது சரியில்லை. அனைத்து ரகசியங்களையும் வெளிப்படையாக கூறி விட்டனர். இது பார்ப்பவர்களுக்கும் போட்டியாளர்களுக்குமே சுவாரஸ்யத்தை குறைத்துள்ளது" என்று கூறியுள்ளனர்.

Tags : Bala, Samyuktha

தொடர்புடைய இணைப்புகள்

ஆரியை பற்றி பேசிய சம்யுக்தா... ரசிகர்கள் கண்டனம் bala and samyuktha convo goes controversial

People looking for online information on Bala, Samyuktha will find this news story useful.