அண்ணன், தம்பி 'ரெண்டு' பேருமே பெருசா இல்ல... ரசிகர்கள் ஏமாற்றம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டின் 100-வது நாள் என்பதால் போட்டியாளர்கள் உற்சாகமும், நெகிழ்ச்சியுமாக இருந்தனர். அவர்களை பிக்பாஸ் தான் அதிக நெகிழ்வாக இருந்தது போல தெரிந்தது. குறிப்பாக என்னால உங்கள பாக்க மட்டும் தான் முடியும் என அவர் சொன்னது மிகவும் டச்சிங்காக இருந்தது. என்றாலும் கூட நிஷு என அழைத்து அவருக்கு ஐ லவ் யூ எல்லாம் சொல்லி ஜாலியாக காமெடி செய்தார்.

'Disappointed' Netizens worried about Balaji and Aari

மேலும் இந்த பிக்பாஸ் வீட்டின் காமெடி தருணங்களை டெலிகாஸ்ட் செய்த பிக்பாஸ் இவை யார் மனதையும் புண்படுத்த அல்ல எனவும் உஷாராக கேப்ஷன் போட்டு கொண்டார். இந்த நிலையில் வீடியோவில் ஆரி, பாலாஜி, சனம் ஆகியோர் பெரிதாக இல்லாதது ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது போல. குறிப்பாக பாலாஜி, ஆரி இருவரும் ஒருசில காட்சிகளே இடம்பெற்று இருந்தனர்.

இதுகுறித்து ரசிகர்கள் அண்ணன் (ஆரி) தம்பி (பாலாஜி) இந்த வீடியோல பெருசா இல்ல எங்களுக்கு ரொம்ப ஏமாற்றமா இருக்கு? என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை ஆக்ஷன் வீடியோ போட்டு இருந்தா இந்த விக்ரம்-வேதா இருந்து இருப்பாங்களோ? நீங்க என்ன சொல்றீங்க?

தொடர்புடைய இணைப்புகள்

'Disappointed' Netizens worried about Balaji and Aari

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.