ரியோவுக்கு மாலை, பட்டாசுடன் வேற லெவல் ஆராவார வரவேற்பு.... வைரலாகும் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். அதுவும் இதுவரை இல்லாத அளவிற்கு 16 கோடி வாக்குகளை பெற்று அவர் முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மூன்றாம் இடத்தை பிடித்து இறுதிப் போட்டியில் இருந்து வெளியேறினார் ரியோ. அவரது ரசிகர்களும் விஜய் டிவி பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

grand welcome to rio after biggboss ரியோவுக்கு ஆராவாரா வரவேற்பு

அந்த வகையில் ரம்யா பாண்டியனின் குடும்பத்தினர் அவருக்கு பட்டாசு வெடித்து, மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் ரியோவின் குடும்பத்தினரும் அவருக்கு ஏகோபித்த வரவேற்பு அளித்து வரவேற்றுள்ளனர். மாலை அணிவித்து, பட்டாசுகள் வெடித்து அவரை குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்க மனைவி மற்றும் மகளுடன் அன்பை பரிமாறி கொள்கிறார். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் தனது குடும்பத்தினரை பிரிந்து இருந்த ரியோ  அவரது மனைவி வந்த பொழுதே மிகவும் கலங்கி விட்டார். இந்நிலையில் அவர் தனது குடும்பத்தினரை சந்தித்த நெகழ்ச்சியான வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ரியோவுக்கு மாலை, பட்டாசுடன் வேற லெவல் ஆராவார வரவேற்பு.... வைரலாகும் வீடியோ..! வீடியோ

Tags : Rio

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

grand welcome to rio after biggboss ரியோவுக்கு ஆராவாரா வரவேற்பு

People looking for online information on Rio will find this news story useful.