Reliable Software
www.garudabazaar.com

Video: பில்லா போலவே, மீண்டும் திரையிடப்படும் மகேஷ் பாபு படம்.. பெண் ரசிகைகள் ஆடும் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபு நடித்து வசூல் குவித்த திரைப்படம் போக்கிரி.

Mahesh Babu Pokiri show 15 yrs girl fans dance video

இந்த படத்தின் தமிழ் வெர்ஷனில் தான் நடிகர் விஜய் நடித்திருப்பார். இந்நிலையில் மகேஷ் பாபு நடித்த போக்கிரி திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் நிறைவு பெறுகிறது. இதனைக் கொண்டாடும் வகையில் மீண்டும் பிரபல திரையரங்கத்தில் ஏப்ரல் 28-ஆம் தேதி இந்த படம் திரையிடப்படுகிறது. 

இதனையொட்டி மகேஷ் பாபுவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதனிடையே இந்த படத்தின் பிரபலமான டோலு டோலு பாடலுக்கு இளம் பெண்கள் நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. இத்தனை வருடம் கழித்து அந்த பாடலில் மகேஷ் பாபு போடும் பிரபலமான ஸ்டெப்புக்கு இப்படி ஒரு க்ரேஸ் இருக்கிறது என்று ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

அண்மையில் தல அஜித் நடித்த பில்லா திரைப்படம் தமிழில் ரீ-ரிலீஸ் ஆனது. நடிகர் மகேஷ் பாபு, அடுத்ததாக பரசுராம் இயக்கத்தில் SarkaruVaariPaata எனும் படத்தில் நடித்துவருகிறார்.

ALSO READ: குழந்தைகளைக் கவர்ந்த க்யூட் டெடி பொம்மையா நடிச்சது இவர்தான்!.. ரிவீல் செய்த படக்குழு!

Mahesh Babu Pokiri show 15 yrs girl fans dance video

People looking for online information on MaheshBabu, Pokiri, SarkaruVaariPaata will find this news story useful.