Reliable Software
www.garudabazaar.com

'சூர்யா40 திரைப்படத்தின் தெறிக்க விடும் ஸ்டில்.. பகிர்ந்த இயக்குநர்!'.. சூர்யாவின் வைரல் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க-2 படத்தைத் தொடர்ந்து சூர்யா தற்போது நடித்துவரும் பெயரிடப்படாத திரைப்படம் சூர்யா40வது படம்.

Surya40 Stunning Still and Surya Viral Tweet சூர்யா பாண்டிராஜ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யாவுடன் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துவரும் இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். 

ரத்னவேலு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே பூஜையுடன் தொடங்கிய நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் சூர்யா நடித்த காட்சியின் ஸ்டில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனைப் பகிர்ந்த சூர்யா, “திரும்பவும் படப்பிடிப்புத் தளத்தில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது!” என்று பதிவிட்டுள்ளார்.இந்த படத்துக்கு பிறகு சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: ‘எக்ஸ்பிரஷன்களால் கட்டிப்போட்ட ரஷ்மிகா & விஜய் தேவரகொண்டா’.. ஆர்ப்பரித்த ரசிகர்கள்!..  50 மில்லியன் பார்வைகளை கடந்த வீடியோ!

Surya40 Stunning Still and Surya Viral Tweet சூர்யா பாண்டிராஜ்

People looking for online information on Pandiraj, Surya, Surya40 will find this news story useful.