Reliable Software
www.garudabazaar.com

அட.. ஆர்யாவின் படத்துல டெடியா நடிச்சுது இவர்தானா? ரிவீல் பண்ணிய படக்குழு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்யா, சாயிஷா மற்றும் பலர் நடிப்பில் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியாகிய திரைப்படம் 'டெடி'.

man performed as Teddy in Arya Movie revealed டெடி ஆர்யா

என்னதான் ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் படமாக இருந்தாலும் படத்தில் வரும் டெடிக்காகவே குழந்தைகள் இந்த படத்தை விரும்பிப் பார்த்துள்ளனர். க்யூட்டான சேட்டைகளும், சுவாரஸ்ய்மான குறும்புகளும் டெடியின் கைவசம் இருந்ததால், குழந்தைகளுக்கு டெடி எளிதில் நண்பி ஆகிவிட்டது.

இதில் இந்த டெடி பொம்மையின் தலை மட்டும்தான் 3டி முறையில் 'பர்பாமன்ஸ் கேப்சர் டெக்னாலஜி' எனும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  ஆனால் உண்மையில் டெடி பொம்மை கேரக்டரில் படம் முழுவதும் நடித்த நடிகர் யார் என்பதை படத்தின் இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன் மற்றும் ஹீரோ ஆர்யா ரிவீல் செய்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆம், உண்மையில் டெடி சம்பந்தமான காட்சிகளின் பின்னால் இருந்து பொம்மைக்குரிய ஆடையினை போட்டுக்கொண்டு டெடிக்கே உண்டான ரசிக்கும்படியான உடல் மொழியை வெளிப்படுத்திய அந்த நடிகரின் பெயர் கோகுல். இந்த கோகுல் ஒரு நாடக நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் டெடி படம் வெளியாகிய ஒரு வாரத்திற்குள் டெடி பொம்மையாக நடித்த கோகுலை மறக்காமல் ரிவீல் செய்து அறிமுகப்படுத்தியுள்ள இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜனை ரசிகர்கள் பாராட்டியும் கோகுலுக்கு வாழ்த்து சொல்லியும் வருகின்றனர்.

ALSO READ: Teddy Tamil Review டெடி திரைப்பட விமர்சனம்

man performed as Teddy in Arya Movie revealed டெடி ஆர்யா

People looking for online information on Arya, Sayyeshaa Saigal, Shakti Soundar Rajan, Teddy Tamil will find this news story useful.