பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலக்ஷ்மி கனகலா கேன்சர் காரணமாக நேற்று (ஏப்ரல் 6 ) மரணமடைந்தார் என்ற சோக செய்தி கிடைத்துள்ளது. இவர் பிரபல நடிகர் தேவதாஸ் கனகலாவின் மகள். இவரது சகோதரர் ராஜீவ் கனகலா தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் பிரபல நடிகர்.

ஸ்ரீலக்ஷ்மி தனது கணவர் பெட்டி ராமா ராவ் மற்றும் மகள்கள் ராகலானா மற்றும் பெர்னாவுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். இவர் நீண்ட நாட்களாக கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
'ராஜசேகர சரித்திரா', 'ருது கீதம்', சூப்பர் மாம், சின்னாரி உள்ளிட்டநிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் மூலம் ஸ்ரீலக்ஷ்மி மிகவும் பிரபலம். இந்நிலையில் ஸ்ரீலக்ஷ்மியின் மரணம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags : Srilakshmi Kanakala, Cancer