பிரபல நடிகைக்கு கொரோனா உறுதி.... "இதுவரை எந்த அறிகுறியும் இல்லை, ஆனால் இப்போது"...கண்ணீர் பதிவு...!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேலை செய்பவர்களும். வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். அநாவசியமாக யாரும் வெளியில் வருவது இல்லை.
![பிரபல நடிகைக்கு கொரோனா உறுதி புகைப்படத்துடன் உருக்கமான பதிவு Popular Actress Shares An Emotional Notes On Corona Virus Symptoms stting it has பிரபல நடிகைக்கு கொரோனா உறுதி புகைப்படத்துடன் உருக்கமான பதிவு Popular Actress Shares An Emotional Notes On Corona Virus Symptoms stting it has](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/popular-actress-shares-an-emotional-notes-on-corona-virus-symptoms-stting-it-has-news-1.jpg)
பல பிரபலங்களும் இந்நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஹாலிவுட்டை சேர்ந்த புகழ்பெற்ற நடிகையான ஆலி வென்ட்ஒர்த் தற்போது கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
அதில் "எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் இப்போது, அதிக ஜுரம், கடுமையான உடல் வலி, மற்றும் நெஞ்சு வலி இருக்கிறது. எனது குடும்பத்திடம் இருந்து விலகி இருக்கிறேன். என்னால் முடிய வில்லை" என்று உருக்கமாக கூறியுள்ளார். இதனை படிக்கும் போது அவர் எவ்வாறான கடுமையான பாதையில் இருக்கிறார் என்பது புரியும். இந்நிலையில் இந்த நோயில் இருந்து தப்பித்து கொள்ள நமக்கு இருக்கும் ஒரே வழி, மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தனிமைப்படுதல் மட்டுமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.