பிரபல தொடரில் இருந்து நீக்கப்பட்ட நடிகை புகார்... "தயாரிப்பாளர் தவறாக நடக்க முயன்றார்"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தொலைக்காட்சி நடிகையான  சிம்ரன் சச்தேவா பரபரப்பான பாலியல் புகாரை எழுப்பியுள்ளார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சோட்டி சர்தார்னி' என்ற தொடரில் நடித்து வந்தார். மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் அந்த தொடரில் இவருக்கு பதிலாக வேறு நடிகை நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இது அந்த தொடரின் ரசிகர்கர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரபல நடிகை பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டு Popular actress raises sexual harrasement complaint against producer

அதற்கான காரணம் என்ன என்று தெரியாத நிலையில் வட இந்திய ஊடகமான டெலி சக்காருக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், "தொடரின் தயாரிப்பாளர்கள் எனது சம்பளத்திலிருந்து 40 சதவீதத்தை குறைத்துக் கொள்ளும்படி வற்புறுத்தினர். மேலும் எனக்கு சம்பளம் தொடர்பான பல பிரச்சினைகளை அளித்தனர். சம்பளம் எனக்கு சரியான நேரத்தில் வருவது தடைப்பட்டது. மேலும் அதில் ஒரு தயாரிப்பாளர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார், மரியாதை இல்லாமலும்,  முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டார்" என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஏற்கனவே பலர் #Metoo மூலம் கொடுமைகளை வெளிப்படுத்தும் நிலையில், தொலைக்காட்சி நடிகையின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பிரபல நடிகை பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டு Popular actress raises sexual harrasement complaint against producer

People looking for online information on Actress, Harrasement, Simran Sachdeva will find this news story useful.