நடிகர் ரிஷி கபூர் மரணமடைந்தார்... அடுத்தடுத்து மரணிக்கும் கலைஞர்கள் - துக்கத்தில் ரசிகர்கள்!
முகப்பு > சினிமா செய்திகள்நேற்றைய தினம் நடிகர் இர்பான் கான் கேன்சரால் மரணமடைந்தார். அந்த சோகம் மறைவதற்குள் அடுத்தக் துக்கச் செய்தி வந்துள்ளது. அதாவது புகழ்பெற்ற நடிகர் ரிஷி கபூர் தனது 66 ம் வயதில் மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தியை நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு "நடிகர் ரிஷி கபூர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். இந்த செய்தி என்னை முற்றிலும் அழித்து விட்டது" என்று கூறியுள்ளார். இப்படி அடுத்தடுத்த மரணிக்கும் கலைஞர்களால் இந்திய திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

குழந்தை நட்சத்திரமாக தோன்றிய அவர் தனது முதல் படத்தில் டிம்பிள் கபாடியா உடன் 1973ம் ஆண்டு அறிமுகமானார். சமீபத்தில் தீபிகா படுகோனை வைத்து ஹாலிவுட் படத்தை ரீமேக் செய்வதாக அறிவித்திருந்த அவர் இன்று ஒரு இயற்கையின் கொடிய பிடியில் சிக்கி மரணமடைந்துள்ளார்.
2018-ஆம் ஆண்டு ரிஷிகபூர் கேன்சரால் பாதிக்கப்பட்டார் அதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் ஒரு வருடத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த பெற்று வந்த அவர், 2019-ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். அதன்பிறகு இந்தியாவில் மிக கவனமாக அவரது உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு வந்தது. பிப்ரவரி மாதம் அவர் உடல்நிலை மிகவும் மோசமாக டெல்லியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார்.
T 3517 - He's GONE .. ! Rishi Kapoor .. gone .. just passed away ..
I am destroyed !
— Amitabh Bachchan (@SrBachchan) April 30, 2020