Corona : பிரபல நடிகர் கருணை கரம்... மருத்துவம் பாக்குறவங்க Safety முக்கியம்.. என்ன செய்தார் தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகின் பல பகுதிகளிலும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்களை  வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர்.

கொரோனா பாதுகாப்பு கவசங்களை வழங்கிய பிரபல நடிகர் Popular actor provide safety PPE corona kits for doctors and health workers

இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்களுக்கும் இந்நோய் பரவும் அபாயம் இருக்கிறது. எனவே அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முழு உடலையும் மூடும் வண்ணம் பாதுகாப்பு அணிகலன்களை போட்டு இருக்க வேண்டும். இந்நிலையில் வருங்காலங்களில் அவற்றிற்கும் பற்றாக்குறை வருமோ என்ற பயம் இருக்கிறது.

இந்நிலையில் இதுபற்றி நடிகர் கவுதம் கார்த்திக் ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் அவர் "கொரோனா பாதுகாப்பு கவசம் (PPE kits) சப்ளை செய்யும் ஒரு நபரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. மருத்துவர்கள். மருத்துவமனைகள், கிளினிக்ஸ், மற்றும் தன்னார்வலர்கள் யார் வேண்டுமானாலும் இவற்றை பெற்று கொள்ள என்னை அணுகலாம்" என்று கூறியுள்ளார். இந்த செயல் பல தரப்பில் இருந்தும் மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.

Entertainment sub editor