உருவாகிறது முந்தானை முடிச்சு ரீமேக்... பாக்யராஜ் வேடத்தில் நடிக்கப் போகும், பிரபல நடிகர்..!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் இயக்கத்தில் மிகுந்த பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் 'முந்தானை முடிச்சு'. 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆனது. குடும்பம் குடும்பமாக தமிழக மக்களை தியேட்டருக்கு படையெடுக்க வைத்த ஒரு படம். இப்படி பல பெருமைகளை கொண்ட இந்த படம் தற்போது 37 ஆண்டுகள் ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீமேக் செய்யப்படுகிறது.

இந்தப் படத்திற்காக பாக்யராஜ், நடிகர் சசிகுமாருடன் கைகோர்த்திருக்கிறார். இந்தப் படத்தை கதை திரைக்கதை வசனம் ஆகியவற்றை பாக்யராஜ் பொறுப்பேற்கிறார். மேலும் இந்த படத்தை ஜே எஸ் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இளம் இயக்குனர் பாலாஜி இயக்குகிறார். கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இந்த படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Tags : Bhagyaraj, Sasikumar, Mundanai mudichu