விஜய் கன்ட்ரோலில் எம்.ஜி.ஆர் மகன்..! சசிகுமார் படத்தின் சுவாரஸ்யமான புதிய தகவல் இதோ.
முகப்பு > சினிமா செய்திகள்சசிகுமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் படத்தை பற்றிய பிரத்யேக தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எம்.ஜி.ஆர் மகன். பொன்ராம் இயக்கும் இத்திரைப்படத்தில் மிர்னாலினி ரவி, சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பாடகர் ஆண்டனி தாசன் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை, விஜய் டிவி வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. பொன்ராமின் வழக்கமான ஸ்டைலில் இத்திரைப்படம் உருவாகியிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags : Sasikumar, Mirnalini Ravi, Ponram, MGR Magan, Vijay tv