மனதை உலுக்கிய மருத்துவரின் மரணச் செய்தி - நடிகர் சசிகுமார் வெளியிட்ட உருக்கமான வீடியோ.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சசிகுமார் அண்மையில் உயிரிழந்த மருத்துவரின் சம்பவம் குறித்து உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் காரணமாக இறந்த மருத்துவரின் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் நடிகர் சசிகுமார் அதுகுறித்து உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார். 'நமது பாதுகாப்புக்காக மருத்துவர்கள், போலீஸார், தூய்மை பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறார்கள். ஆனால் சமீபத்தில் கேள்விப்படும் சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன. மருத்துவர்களிடம் அந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். நம்மை பாதுகாப்பவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்காக மரியாதையை கொடுக்க வேண்டும். மனிதம் வளரனும்'' என அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
#மருத்துவர்களே_கடவுள் #DoctorsAreGod pic.twitter.com/qekUxPlo4x
— M.Sasikumar (@SasikumarDir) April 20, 2020