கஜோல் மற்றும் மகளுக்கு கொரோனாவா?... தீயாய் பரவும் செய்தி... கணவர் அஜய் தேவ்கன் 'அவசர' பதிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கஜோல் மற்றும் மகளுக்கு கொரோனாவா கணவர் அஜய் தேவ்கன் அவசர பதிவு Popular Actor Ajay Devgan On kajol Is Infected By Corona News

இந்நிலையில் 'மின்சார கனவு' படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை கஜோல். இவர் ஹிந்தி  சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவர். பின்பு தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி-2 படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். மேலும் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்கிறார்.

இந்த நிலையில் நடிகை கஜோல் மற்றும் அவரது மகளுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும். அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளதாகவும் செய்திகள் பரவின. இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நடிகர் அஜய் தேவ்கன், "எனது மனைவி மற்றும் மகள் பற்றி விசாரிக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த வதந்தியில் துளிகூட உண்மையில்லை" என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor